சிந்தனை மட்டுமல்ல, செயலாலும் நேர்மை. அவர்தான் சேஷாத்ரி!
- தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா
பட்டிமன்றங்களில் எங்கள் 'உடன் பேச்சாளர்', அன்பு உடன்பிறப்பும் கூட. மேடைக்கு வந்தவுடன் அரங்கம் அதிரக்கைத்தட்டல் பெறுபவர். பேச்சுக் கலையில் நம்பிக்கையூட்டும் ஆளுமை. 'உடன்' எனும் நாவலுடன் படைப்புலகில் அறிமுகமாகும் தம்பி சேஷாத்ரிக்கு வாழ்த்துகள்.
- 'பட்டிமன்றம்' திரு. ராஜா
இந்தப் புத்தகம் பேசப்படும்.
- எழுத்தாளர், பேச்சாளர், திருமதி. பாரதி பாஸ்கர்
வாழ்க்கையில் நடப்பவற்றையே மிகைப்படுத்தி, அலங்கார வார்த்தைகளில் எழுதினால் அதன் பெயர்தான் கதை என்கிற இலக்கணத்தை மாற்றி யோசித்திருக்கிறார் அன்புத் தம்பி சேஷாத்ரி.
- 'மேடைத்தமிழ்க் காவலர்', கல்யாணமாலை திருமதி. மீரா நாகராஜன்
Hypothetical climax போல தோன்றினாலும், சிந்தித்துப் பார்த்தால் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
- எழுத்தாளர், விஜய் ராணிமைந்தன்.
வேஷமில்லாமல் எழுதுவதும் பேசுவதும் சேஷாத்ரியின் இயல்பு. இவரது அறிவு மெய் அறிவு. இவரது மனம் தமிழ் மனம். சராசரி வாழ்வின் சம்பவங்களைப் படிக்கற்களாக்கி சத்திய வாழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர். பிறரையும் நகர்த்த விரும்புகிறவர். எதிர்கால தமிழ்வெளியில் உலா வரவிருக்கும் கனாக்கார ஆன்மிகம்.
- எழுத்தாளர், திரைமொழியாளர், கபிலன் வைரமுத்து